திருப்பதியில் பிரம்மோற்சவ விழா : 2 ஆண்டுக்கு பிறகு, சாமி் வீதிஉலா..
 

By 
tripathi

திருப்பதி அன்னமய்ய பவனில் பக்தர்கள் குறை கேட்பு நிகழ்ச்சி தொலைபேசி வாயிலாக நடைபெற்றது. 

இதில், பக்தர்களின் கேள்விகளுக்கு தர்மா ரெட்டி பதிலளித்தார். 

'திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 

கொரோனா தொற்று முடிந்து 2 ஆண்டுகளுக்குப் பின் மாட வீதிகளில் நடைபெறவிருக்கும் வாகன சேவைகளில் ஏழுமலையான் தரிசனம் தர உள்ளார். 

பிரம்மோற்சவத்தையொட்டி, செப்டம்பர் மாதம் 27-ந்தேதி மாலை 5.45 மணி முதல் 6.15 மணி வரை மீன லக்னத்தில் கருடக் கொடியேற்றம் நடைபெறும். 

இதில், ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் வழங்க உள்ளார். 

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளாக அக்டோபர் 1-ந்தேதி கருட வாகனமும், 2-ந்தேதி தங்க ரதமும், 4-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. 

கொரோனா காரணமாக, நிறுத்தப்பட்டிருந்த அகண்ட ஹரிநாம சங்கீர்த்தன நிகழ்ச்சி ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. 

ஜெகன்மோகன் ரெட்டியால் திருப்பதியில் தொடங்கி வைக்கப்பட்ட ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் ஹிருதயாலயா மருத்துவமனையில் இதுவரை 490 குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. 

இதில், குறிப்பாக பிறந்து 7 நாள்களே ஆன பெண் குழந்தைக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர். இங்கு இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இதேபோல், குழந்தைகள் தொடர்பான அனைத்து வகை நோய்களுக்கும் சிறந்த சிகிச்சை அளிக்கும் வகையில் ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும்' என்றார்.
*

Share this story