சதுரகிரி கோவிலுக்கு செல்ல, பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

sathura

வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. 

இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்தநிலையில், வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. 

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
*

Share this story