திருப்பதி கோசாலையில், இன்று கோபூஜை.. 

By 
gosa

திருப்பதி கோசாலையில், இன்று கோபூஜை.. 

இன்று, மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகின்றது. காலை 06.30 முதல் 07.30 வரை, மாலை 04.30 முதல் 05.30 வரை மாட்டுப் பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரமாக அமைகின்றது.

இந்நிலையில், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோசாலையில் 16-ந்தேதி கோபூஜை மஹோற்சவம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு வேணுகான இசையுடன் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கி, வேத பாராயணம், வேணுகோபாலசாமி பூஜை, துளசி பூஜை, கோபம்மா பூஜை ஆகியவை நடக்கிறது. 

பின்னர் மாடுகள், குதிரைகள், யானைகளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு வெல்லம், பழம், பச்சரிசி, தீவன புல், கரும்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. அதேபோல் பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this story