சென்னையில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

param

சென்னை, செனாய்நகர் சுப்புராயன் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, நாளை 11-ந்தேதி திங்கட்கிழமை கும்பாபிஷேகம் நடக்கிறது. 

கும்பாபிஷேகத்தையொட்டி, இன்று 10-விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகாசங்கல்பம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை ஆகியவை நடக்கிறது. 

நாளை, திங்கள் கிழமை 11-ந்தேதி காலையில் 2-ம் கால யாக பூஜை நடக்கிறது. 

பின்னர், யாக சாலையில் இருந்து புனிதநீர் எடுத்துச்செல்லப்படுகிறது. 

காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
*

Share this story