போராட்டம் இல்லாத வாழ்க்கை, போர் அடித்து விடும் : நேதாஜி

subash

சுபாஷ் சந்திர போஸ் துவங்கிய படை தான், இன்றும் இந்தியாவை காக்கும் இந்திய ராணுவப்படையாக திகழ்கிறது. இந்த நேதாஜியின் பிறந்த தினம் இன்று.

அவரைப் போற்றும் வகையில், அவர் கூறிய சில வீர ஆன்மீக வார்த்தைகள் சில  :

1. ரத்தத்தை கொடுங்கள்; உங்களுக்கு சுதந்திரத்தை அளிக்கிறேன்.

2.சுதந்திரம் கொடுக்கப்படவில்லை எடுக்கப்பட்டது.

3. ஒரு சிந்தனைக்காக, மனிதன் இறக்கலாம். ஆனால், அவனது சிந்தனைகள் அதன்பின் 1000 பேரிடம் செல்லும்.

4.நமது சுதந்திரத்திற்காக, நமது ரத்தத்தை வழங்க வேண்டியது நமது கடமை.

5. நமது முயற்சிகளும் தியாகங்களும் தான், நம்மை நமது சொந்த திறனால் சுதந்திரத்தை பெற உதவும்.

6. நம்பிக்கையை என்றும் இழக்காதீர். இந்தியாவை அடிமைத்தனத்திலேயே வைத்திருக்க, பூமியில் எந்த சக்தியும் இல்லை.

7.இந்தியா அழைக்கிறது. உங்கள் ரத்தம் அழைக்கிறது. நம்மிடம் இழக்க நேரம் எதுவும் இல்லை. எழுந்திருங்கள்
8. போராட்டம் இல்லாத வாழ்க்கை, போர் அடித்து விடும்.
*

Share this story