பனிமய மாதா பேராலயம் : 5-ந்தேதி பெருந்திருவிழா தொடக்கம்..

By 
pani

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா, ஆண்டுதோறும் ஜூலை 26-ந் தேதி தொடங்கி, ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. 

இந்த விழாவில், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழக்கம். 

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக, பக்தர்கள் இன்றி விழா நடந்தது. இந்த ஆண்டு ஆலயத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, கொடிபவனி நடந்தது.

கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு 2-ம் திருப்பலி நடந்தது. 

காலை 7 மணிக்கு சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, அன்னையின் கொடி ஆலயத்தை சுற்றி மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது.

அப்போது, புறாக்கள் பறக்க விடப்பட்டன. பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இழுவை கப்பல் மூலம் ஒலி எழுப்பப்பட்டது. 

அதன்பிறகு, பக்தர்கள் நேர்ச்சையாக வைத்த பால், பழம் உள்ளிட்டவற்றை மக்களுக்கு வழங்கினர். 

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருவிழா நடைபெறுகிறது.

அன்று, மாலை 5 மணிக்கு, பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. 

இரவு 7 மணிக்கு, நகர வீதிகளில் சப்பரத்தில் அன்னையின் திருவுருவப் பவனி நடக்கிறது.
*

Share this story