சபரிமலை கோவில் நடை திறப்பு : இன்று, பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடுகள்..

வைகாசி மாத பூஜைக்காக, சபரிமலை கோவில் நடை கடந்த மே மாதம் 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, சிறப்பு பூஜைகளை நடத்தினார். பின்னர் 19-ந் தேதி மாத பூஜை நிறைவு பெற்றது.
ஆனி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி திறக்கப்படுகிறது.
முன்னதாக, பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு நேற்று (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
இன்று வியாழக்கிழமை பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு, பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறும். இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில், பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது.
தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர, திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
*