சபரிமலை கோவில் 6-ந்தேதி நடை திறப்பு : நிகழ்ச்சிகள் விவரம்..

By 
sabari

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 6-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். தொடர்ந்து மறுநாள் 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், நெய்யபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது.

மேலும் 8-ந்தேதி திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

அதே சமயத்தில் நடை திறக்கப்படும் நாள் முதல் 10-ந்தேதி வரை நிலக்கல் மகாதேவர் கோவிலில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவும் நடைபெறுகிறது. ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்கு பிறகு நடை 10-ந்தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.

மீண்டும் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 16-ந்தேதி திறக்கப்படும்.

இதற்கான ஆன்லைன் முன்பதிவும் நடைபெற்று வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Share this story