புளியங்குடி முப்பெருந்தேவியர் கோவிலில் சிறப்பு வழிபாடு : நிகழ்ச்சிகள் விவரம்..

By 
puliangudi

* புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மன் கோவிலில் ஐப்பசி மாதாந்திர வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 4.30 மணியளிவில் நடை திறக்கப்பட்டு பால், தயிர், மஞ்சள், சந்தனம், குங்குமம். திருநீறு, நறுமண பொருட்கள் உள்பட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கோவில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் காலை 11 மணி முதல் 3 மணி வரை சிறப்பு அருள் வாக்கு நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

*  திருச்செங்கோட்டில் உள்ள ஈரோடு சாலையில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பெரிய தெப்பக்குளம் உள்ளது. இங்கு சுமார் 51 ஆண்டுகளுக்கு பின்னா் நேற்று தெப்பத்தேர் திருவிழா விமரிசையாக நடந்தது.

விழாவில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகுமுத்து மாரியம்மன் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு தெப்பத்தேர் வடம் பிடிக்கப்பட்டது.

அதன்படி, கிழக்கு கரையில் இருந்து மேற்கு கரை சென்ற தெப்பத்தேரில் பவனி வந்த அம்மன்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து நடுகுள பகுதிக்கு வந்த தேருக்கு 4 திசைகளிலும் ஆராதனை செய்யப்பட்டு கிழக்கு கரையில் நிலை சேர்க்கப்பட்டது.

அப்போது அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சாமி தரிசனம் செய்தனர்.
 

Share this story