ஸ்ரீசாய் பாபாவின் 11 நாமாவளிகளும், நிகரற்ற மந்திரமும்.!

sai baba

சமீப காலமாக சாய்பாபாவின் திருநாமத்தை மேம்படுத்தும் வகையில் எத்தனையோ மகத்தான மந்திரங்கள் வந்து விட்டன. நாடு முழுவதும் எண்ணற்றவர்கள் பாபா 108 போற்றி எழுதி புழக்கத்தில் விட்டுள்ளனர். 

அவை எல்லாமே, பாபா பக்தர்களிடம் மிக சிறந்த மந்திரங்களாக பரவி உள்ளன. அதுபோல, ஸ்ரீசாய் பாபாவின் 11 நாமாவளிகள் புகழ் பெற்றவை.

1. ஓம் சமார்த்த சத்குரு ஸ்ரீ சாயிநாதாய நமஹ
2.ஓம் குருதேவ தத்தாத்ரேயாய சாயிநாதாய நமஹ
3. ஓம் விஷ்வப் பிரணாய சாயிநாதாய நமஹ
4. ஓம் விக்னநிவாராகாய சாயிநாதாய நமஹ
5. ஓம் ரோக நிவாராகாய சாயிநாதாய நமஹ

6. ஓம் மஹாபய நிவாராகாய சாயிநாதாய நமஹ
7. ஓம் சாபவிமோச்சகாய சாயிநாதாய நமஹ
8. ஓம் அபயப் பிரதாய சாயிநாதாய நமஹ
9. ஓம் சகல தேவத ஸ்வரூபாய சாயிநாதாய நமஹ
10. ஓம் சாரங்கதா வாத்சலாய சாயிநாதாய நமஹ

11. ஓம் ஆயுள் ஆரோக்ய ஐசுவரிய பிரதாய சாயிநாதாய நமஹ

இப்படி, பல்வேறு மந்திரங்கள் இருந்தாலும், பாபாவின் மூல மந்திரமான 'ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்' என்ற மந்திரம் நிகரற்ற மந்திரமாக உலகம் முழுக்க கோடிக்கணக்கான பக்தர்களின் மனதுக்குள் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. 

தினமும் பாபா படம் முன்பு அமர்ந்து, இந்த மந்திரத்தை சொல்லச் சொல்ல எண்ணியது நிறைவேறும் என நம்பப்படுகிறது.
*

Share this story