தனி சிறப்புடன் அமைந்த, விருத்தகிரீஸ்வரர் கோவில் நந்திகள்..

By 
viru

எத்தனையோ சிறப்புகளுடன் அமைய பெற்ற விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நந்தியும் தனி சிறப்புடன் அமைய பெற்று இருக்கிறது. 

அதாவது, கோவிலில் 5 நந்திகள் அமைய பெற்று இருக்கிறது.

இவை அனைத்தும், ஒரே நேர்க்கோட்டில் பழமலை நாதரை (விருத்தகிரீஸ்வரர்) நோக்கி சற்றி வலது புறமாக கழுத்தை திருப்பியபடி அமைந்திருப்பது இந்த கோவிலில் மட்டுமே இருக்கும், தனி சிற்பபாக பார்க்கப்படுகிறது.

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேரோடும் வீதிகள் நான்கு புறத்திலும் 7 நிலைகளுடன், 7 கலசங்களுடன் வான் உயர்ந்த கோபுரங்கள் அமைந்துள்ளன. கோவிலின் பழம்பெருமையை இந்த கோபுரங்கள் வெளிப்படுத்துகிறது.

இதை, தன் கணவர் கண்டராதித்த சோழன் நினைவாக செம்பியன் மாதேவி (கி.பி. 957-1001 இடையே) திருப்பணி செய்தது ராஜராஜ சோழன் கல்வெட்டில் இருந்து தெரிய வருகிறது.

மேலும், கோவிலில் உள்ள 5 கோபுரங்களிலும் சைவ புராண செய்திகளை வெளிப்படுத்தும் கல், சுதை சிற்பங்கள் அமைந்துள்ளன.
*

Share this story