தேவநாதசாமி கோவிலில் தைலக்காப்பு உற்சவம், இன்று தொடக்கம்..

By 
devanatha

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 23-ந்தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. 

தொடர்ந்து கடந்த 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், அன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கி 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 

இதில், தினசரி சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தேசிகர் மற்றும் ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை, சாற்றுமுறை நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மூலவர் தேவநாதசாமிக்கு தைலக்காப்பு உற்சவம் தொடங்கியது. 

இதையொட்டி, தேவநாதசாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், இன்று ராஜ அலங்காரம் கலைக்கப்பட்டு, மூலவர் தேவநாதசாமிக்கு தைலக்காப்பு சாற்றப்படும். இந்த தைலக்காப்பு சித்திரை மாதம் வரை சாமிக்கு சாற்றப்படும்.

Share this story