திருமால் என் மணவாளன் : ஆண்டாள் காதல்..

By 
lover

மார்கழி மாதத்தில் பெண்கள் திருப்பாவை படிக்க வேண்டும். ஆண்டாள் பாடிய பாடல் என்பதாலும், பெண்கள் இருக்கும் நோன்பைப் பற்றிய பாடலாக இருப்பதால் திருப்பாவை எனப் பெயர் பெற்றன. 

திருமாலை மணம் புரிய வேண்டும். தன் விருப்பப்படியே திருமாலை கணவராக மணம்புரிந்தார் ஆண்டாள். திருமாலைத் தவிர வேறு எவரையும் மணவாளனாக ஏற்க மறுத்தவர் ஆண்டாள். 

ஆண்டாள் பாடிய திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளன. திருப்பாவையின் தொகுப்பு பாடப்பட்ட நோக்கத்தை எடுத்துரைப்பது முதல் பாடல். 2 முதல் 5 வரை உள்ள பாடல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணரின் சிறப்பைக் கூறும் பாடலாக அமைந்துள்ளன. 

6 முதல் 15 வரை துதிப்பாடல்கள் பெண் தோழர்களை கற்பனை செய்து ஆழ்வார்களுக்கு ஒப்பாக கொண்டு அவர்களை எழுப்பி நீராடிவிட்டு கோவிலுக்கு செல்வதை பற்றி எடுத்துரைக்கும்.16 முதல் 30 வரையில் உள்ள பாடல்கள் வெண்ணை உண்ட கிருஷ்ணனை உருகி பாடப்படும். 

'உன்னையே கணவனாக எண்ணிக் கொண்டுள்ள என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்; என்பதற்காக பாடப்பட்டது. இத்தனை பெருமையை கொண்ட ஆண்டாளை மனமுருகி வேண்டி பாட வேண்டும்.
.
ஆண்டாள் மகாலட்சுமி, பூமாதேவி அவதாரம் என்பதால் பொறுமைக் குணம் வாழ்ந்தவர். அறிந்து அறியாமல் செய்த தவறுகளை உணர்ந்து ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்க மனமிரங்கி அருள்புரிவாள்.

Share this story