இதமும் மதமும்...

cholan

'ராஜராஜ சோழன் இந்து இல்லை, அன்றைய காலகட்டத்தில் சைவம், வைணவம், சமணம் ஆகியனவே இருந்தன.

பின்னர் வந்த காலத்தில், ஆங்கிலேயன் தனது புரிதலுக்காக இவைகள் யாவையும் பொதுவாக பொருள் கொள்ளும் பொருட்டு, 'இந்து' என அழைக்க, அச்சொல் உருவானது' என்ற சில பிரபலங்களின் பேச்சு சர்ச்சைக்குள்ளாகி தொடர்கிறது.

இந்நிலையில், இது தொடர்பான விவாதத்தில் "மதம் என்பது களிற்றுக்கு பிடிக்கட்டும்; மகத்துவம் என்பதை மனிதம் படைக்கட்டும்" என வலியுறுத்தியுள்ளார் கவிஞர் மருது அழகுராஜ்.

இதுகுறித்து, ' மானிடம் களிப்புற்று.. மாண்புற வாழ வகை செய்யும் வண்ணம்' அவர் வெளியிட்டுள்ள கவிதை வருமாறு :

* இயேசுவை
இல்லை
என்று

எதிர்வாதம்
பேசுபவர்

கிறிஸ்துவரில்
கிடையாது

* அல்லாவை
இல்லை என

அபவாதம்
பேசுபவர்

இஸ்லாமியரில்
இல்லை..

* குருநானக்கை
குறை
சொல்பவர்

சீக்கியரில்
கிடையாது

புத்தரை
பழித்திடும்

பெளத்தர்களை
பார்த்ததும்
கிடையாது..

ஆனால்

இறைவன்
உண்டென்று
சொல்பவரும்

இல்லையென்று
மறுப்பவரும்

இருக்கின்ற
மதமாக

இந்து மதம்
இருக்கிறது..

* இறை உறையும்
ஆலயத்தின்
வாசலில்

இறைமறுப்பு
செய்திட்ட

பெரியாருக்கும்
சிலை
அமைக்க
அனுமதிக்கும்

பெரிய
மனசும்
இருக்கிறது..

அப்படி
இருக்க

இந்து
ஒரு
மதமே இல்லை
என்னும்

எதிர்வாதம்
எதற்காக..

* சைவம்
வைணவம்
சமணம் என

சமயங்கள்
உண்டு

அது இந்து
மதம் ஆகாது
என்றெல்லாம்

வெறுப்பு
பேச்சு
எதற்காக..

* இயற்பியல்
வேதியியல்
தாவரவியல்
விலங்கியல்

அனைத்தும்

அறிவியலுக்குள்
அடக்கம்
என்றால்

அது போல,

இந்து
மதத்தின்

பொருளடக்கத்தில்..

சைவமும்
வைணவம்
சமணம்
எல்லாம்

பாடங்களாக
இருப்பதில்

பழுதில்லை
தானே...

* பெருவுடையார்
கோவில்
எழுப்பி

சிவலிங்கத்தை
பிரதிக்ஷ்டை
செய்திட்ட

ராஜராஜ
சோழனை

இந்துவே
இல்லை என

முரண்வாதம்
எதற்காக..

* அரிதாள்
அறுக்கையில்

மறுதாள்
வளரும்

தஞ்சையில்
தொடங்கி

அங்கோர்வாட்
வரை
சிவாலயம்
நிறுவிய

சோழனை
முன் வைத்து

சொற்போர்
எதற்காக..

* மனிதன்
நம்புகிற.

மதங்களை
மதிப்போம்..

சக மதத்தை
மதிக்கும்

சகோதரத்துவம்
வளர்ப்போம்

களிற்றுக்கு
பிடிக்கும்

மதம் போல்
அல்லாது,

மனிதன்
களிப்புற்று
வாழ்ந்திடும்

மகத்துவம்
படைப்போம்...
*

Share this story