திருப்பதி கோவில் : அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று வெளியீடு

anga

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சண டோக்கன் 25-ந்தேதி ( இன்று-வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. 

இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் அங்கப்பிரதட்சண டோக்கன் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* முருகப்பெருமானின் அவதார சிறப்பை விளக்கும் வகையில், கார்த்திகை தீபத்திருவிழா அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலிலும் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 30-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி 7 நாட்கள் நடக்கிறது.

திருவிழாவில் முதல் 6 நாட்களும் சாயரட்சை பூஜைக்கு பின்னர் சண்முகர் அர்ச்சனை, தீபாராதனை, சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
*

Share this story