திருப்பதி கோவில், நவம்பர் மாத தரிசனம் : டிக்கெட்டுகள் இன்று வெளியீடு..

By 
thirupathi1

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்ய நவம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் இன்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. 

அதேபோல் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று மாலை 3 மணியளவில் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இந்த டிக்கெட்டுகள் முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

நவம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுக்கான எலக்ட்ரானிக் குலுக்கல் முறை நாளை நடக்கிறது. அக்டோபர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 22-ந்தேதி காலை 9 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. 

ஆனால், பிரம்மோற்சவம் நடைபெறும் தேதிகளில், அதாவது அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கப்பட மாட்டாது. 

பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு, அந்தந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this story