எண்ணி இருந்தது ஈடேற, இன்று சொர்க்க வாசல் திறப்பு..

vaigundam

பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி 2-ந்தேதி இன்று  நடக்கிறது. 

இதையொட்டி, பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. பிரசித்தி பெற்ற 108 திவ்ய தரிசனங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழிமார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 

வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், ஏழகரம் பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் உள்பட மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி இன்று அதிகாலை கோவில்களில் விசேஷ அபிஷேகங்கள் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். 

இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு, எண்ணிய கனவெல்லாம் நனவாக  சாமி தரிசனம் செய்கிறார்கள்.
 

Share this story