வேளாங்கண்ணி பெருவிழா; கோலாகலமாய் தொடக்கம்..

meri

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. 

இந்த பேராலயம், மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படுகிறது. 

இந்தியாவில், கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை இந்த பேராலயம் பெற்று விளங்குகிறது. 

இந்த பேராலயம், வங்க கடலோரம் அமைந்திருப்பதால், மேலும் சிறப்பு பெற்றுள்ளது. 

இந்த ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

பல்வேறு சிறப்பு பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் நடைபெறும். 

அதன்படி, ஆகஸ்டு 29-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி செப்டம்பர் 7-ந்தேதி நடைபெறுகிறது. 

இந்த விழாவில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்காக பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆண்டு பெருவிழாவை முன்னிட்ட பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி நடைபெறுகிறது. 

இதற்காக, பேராலயத்தில் சாரம் அமைக்கப்பட்டு வருகிறது.
*

Share this story