ரம்ஜான் நோன்பின் நோக்கம் என்ன?

ramadan

ரம்ஜான் மாதத்தில் செய்யப்படும் நற்செயலுக்காக, கூலி பன்மடங்காக இறைவன் வழங்குகின்றான். 

இறை நம்பிக்கையாளர்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கூடுதலாக நன்மைகளை அறுவடை செய்கின்றார்கள். 

அதனால்தான், பெருமானார் (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும்போது, இவ்விதமாக பிரார்த்தனை செய்வார்கள்:

'தாகம் தீர்ந்தது, நரம்புகள் நனைந்தன, கூலி உறுதியாகி விட்டது, அல்லாஹ் நாடினால்'.

நோன்பாளியின் அனைத்துச் செயல்களும் இறைவனின் கூலியை எதிர்பார்த்துதான் இருக்கின்றன. 

நோன்பு திறக்க, பள்ளிவாசல்களில் செய்யப்படும் ஏற்பாடுகளும், மக்கள் அதற்காக செலவு செய்ய போட்டி போடுவதுமாக - இறை நம்பிக்கையாளர்கள் இறையருளைப் பெற காட்டும் ஆர்வம்தான் என்ன.!

கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆக, நன்மையான செயல்களைத் தொடர்க.!

அதுவே, ரமலான் மாதத்தின் மூலம் பெறக் கூடிய ‘தக்வா’ என்ற இறையச்சமாக திகழ முடியும்.

Share this story