ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்?

By 
onam

கேரள மாநிலத்தில் மக்கள் அனைவரும் கொண்டாடும் பொதுப் பண்டிகையாக ஓணம் பண்டிகை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. 

அழகான கோலம் போட்டு, பல்வேறு பதார்த்தங்களைப் படைத்து மகிழ்ச்சியாக பிரம்மோற்சவம் போல தொடர்ச்சியாக சில நாட்கள் இப்பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். 

ஓணம் என்பது திருவோண நட்சத்திரத்தைக் குறிக்கும். திருவோண நட்சத்திரத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படுவதால் ஓணம் பண்டிகை என்று பெயர். 

கேரள மக்கள் இதை தங்கள் புத்தாண்டு தொடக்கமாகவும் கொண்டாடுகின்றனர். வாமனருக்கு மூன்றடி மண் தந்த மகாபலிசக்கரவர்த்தி, இந்த நாளில் தன்னுடைய மக்களைப் பார்ப்பதற்காக வருவதாகவும், அவரை வரவேற்பதாகவும், இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். 

ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். ஆவணி மாதம் பூக்கள் பூத்துக்குலுங்கும் மாதமாகும். 

ஓணத்திருநாளை மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர். பூக்கோலத்தில் அதைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம்.

Share this story