ஸ்ரீஆஞ்சநேயர் வழிபாடும், வந்து சேரும் வல்லமை பலன்களும்..
 

anjaneya

ஸ்ரீராம பிரான் மீது பக்தி, பணிவு, மற்றும் ராஜதந்திரம், வீரம், நம்பகத்தன்மை யாவும் ஒருங்கே பெற்றவர் ஸ்ரீ ஆஞ்சநேயர்.

ஆஞ்சநேயரை நினைத்தாலே புத்தி வரும், பக்தி வரும், புகழ் வரும், செல்வம் வரும், மனஉறுதி வரும், வீரம் வரும்.

அனைத்துக்கும் மேலாக அவர் கடும் பிரம்மச்சார்யத்தை கடைபாபிடிப்பதால், மனதில் ஒரு நொடி கூட தேவை இல்லாத காம உணர்வு வரவே வராது. 

ஆஞ்சநேய விரதம் இருந்தால், குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். எதிரிகளின் தொல்லை நீங்கி வெற்றி கிடைக்கும். உறவினர்களிடையே நட்பு அதிகரிக்கும். 

இதன் மூலம் குபேரனுக்கு இணையான வாழ்வை பெறலாம் என்பதே ஐதீகம். 

தினமும் காலை அருகில் உள்ள பெருமாள் ஆலயத்தில் ஆஞ்சநேயரை வழிபட்டு, பணிகளை செய்து வந்தால் வெற்றி மீது வெற்றி வரும். 

13 முடிச்சுள்ள அனுமன் விரதக்கயிறை கையில் கட்டிக் கொண்டால், எல்லா முயற்சிகளும் இடையூறு இல்லாமல் நிறைவேறும். 

ஆஞ்சநேயரின் சன்னதி முன்பு நின்று, அவரது மூல மந்திரத்தை 9 தடவை சொல்லி வழிபட்டால், வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகும். 

கடுமையான வியாதிகள் குணமாகும். ஆஞ்சநேயரிடம் யார் ஒருவர் மனதைப் பறி கொடுக்கிறாரோ, அவர் மனம் தெளிவடையும். அவரால் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். 

ஆஞ்சநேயரின் தீவிர பக்தராக மாறிவிட்டால், ஆஞ்சநேயரின் முழு பலமும் அவருக்கு வந்து விடும்.

எனவே, பெருமாள் ஆலயத்தில் வழிபாடு செய்யும்போது ஆஞ்சநேயரிடம் மனம் விட்டுப் பேசலாம். 

'யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவரான ராம தூதனே! கருணைக் கடலே! பிரபோ..என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் வெற்றி தந்து சாதித்து தாருங்கள்' என்று கேட்கலாம். 

ஆஞ்சநேயரிடம் மனம் உருக, உருக வேண்டுவதால், பிடித்த தோஷங்கள் கரைந்தோடும். 

ஆஞ்சநேயர் பணிவின் அணிகலனாகவும், ராஜதந்திரத்தில் சாமர்த்திய சாலியாகவும், வாக்கு சாதுர்யத்தில் வல்லவராகவும், வீரத்தில் நிகர் இல்லாதவராகவும், விளங்கி வருகிறார். 

அவரை வழிபட்டால், இத்தனை சிறப்புகளும் நிச்சயம் வந்துசேரும்.
*

Share this story