திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில், இன்று அன்னாபிஷேகம் : பக்தர்களுக்கு அனுமதி

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில், மாலை 4 மணியில் இருந்து மாலை 6 மணி வரை சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
அன்னலிங்கத்தை தரிசிக்க, பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில், இன்று 20-ந்தேதி அன்னாபிஷேகம் நடக்கிறது.
இதையொட்டி, இன்று காலை 11.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.
மதியம் 12 மணியில் இருந்து மதியம் 2.30 மணி வரை அபிஷேகம், சஹஸ்ர நாமார்ச்சனை, தீபாராதனை, மாலை 4 மணியில் இருந்து மாலை 6 மணி வரை சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
அன்னலிங்கத்தை தரிசிக்க, பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
மாலை 6 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை அன்னாபிஷேகம் செய்த சாதம் அகற்றப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இதையடுத்து, சிவலிங்கத்தை சுத்தம் செய்து, மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.