விநாயகரை வழிபடும் முறையும் பலன்களும்.!

By 
Benefits of worshiping Ganesha!

விநாயகரை வழிபடும் போது, மூன்று விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்வது அவசியம். 

1. விநாயகர் முன்பு தோப்புகரணம் போடுவது. 2. தலையில் குட்டிக்கொள்வது. 3. சிதறு தேங்காய் உடைத்தல். இந்த மூன்றையும் விநாயகர் விரும்புகிறார். 

எனவே, விநாயகர் சன்னதி முன்பு இவற்றை அவசியம் செய்தல் வேண்டும்.

அருகம்புல் அர்ச்சனை :

விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது அருகம்புல். உலகில் முதலில் தோன்றியது அருகம்புல்தான். அதில் இருந்துதான் ஜீவ ஆத்மாக்கள் உருவம் எடுத்தன. 

எனவே, அருகம்புல்லால், நாம் விநாயகரை அர்ச்சனை செய்து வழிபட்டால், நமது யோக நிலையில் முன்னேற்றம் தருவார் என்பது ஐதீகம் ஆகும்.

சிலர் மோதகம் தயாரித்து விநாயகருக்கு படைத்து வணங்குவார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால், பக்தி கலந்த வாழ்க்கையே சுவையானது என்பதாகும். 

எனவே, விநாயகருக்கு தொடர்புடைய ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்து, புரிந்துகொண்டு வழிபட வேண்டும்.

மரத்தடி விநாயகர்கள் :

விநாயகர் வீற்றிருக்கும் தல விருட்சங்களிலும் சிறப்புகள் உள்ளன. வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால், திருமணம் கைகூடும். புன்னை மரத்தடி விநாயகரை வழிபட்டால் கணவன்-மனைவி ஒற்றுமை ஓங்கும். 

மகிழம் மரத்தடி விநாயகரை வழிபட்டால், இடமாற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். மா மரத்தடி விநாயகரை வழிபட்டால் கோபம் அடங்கும். 

வேப்ப மரத்தடி விநாயகரை வழிபட்டால், மனம்போல் வாழ்வு கிடைக்கும். ஆல மரத்தடி விநாயகரை வழிபட்டால், நோய்கள் தீரும். 

அரச மரத்தடி விநாயகரை வழிபட்டால், பயிர்கள் விளைச்சல் அதிகமாகும். வில்வ மரத்தடி விநாயகரை வழிபட்டால், பிரிந்த தம்பதிகள் சேருவார்கள்.

அதுபோல, விநாயகர் படத்துக்கு சந்தனம், குங்குமம் வைத்து 21 வெள்ளிக்கிழமை விநாயகர் அகவல் படித்தால், திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். 

தோஷம் நெருங்காது :

வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று, யார் ஒருவர் விநாயகரை மனப்பூர்வமாக வழிபடுகிறார்களோ அவர்களை ராகு, கேது தோஷம் நெருங்காது. 

இப்படி விநாயகரின் சிறப்புகளையும், வழிபாடு பலன்களையும் சொல்லிக்கொண்டே போகலாம்

Share this story