தர்ம சிந்தனை மேலோங்கி தேசமெல்லாம் மகிழ வேண்டும் : வழக்கறிஞர் எம்.ஜி.நகர் கே.புகழேந்தி..

By 
mgrp3

ஜெகத் குரு ஆதிசங்கரர் ஜெயந்தி நன்னாளில், சிறப்பு பூஜைகள் உலகமெங்கும் உள்ள இந்துக்களால் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்தியா முழுவதும் நடந்தே சென்று இந்து மதத்தின்  பெருமையை மக்களுக்கு புரிய வைத்த மஹான் ஜெகத் குரு ஆதிசங்கரர். அவரை நினைவு கூர்ந்து, சாந்தா கிருஷ்ணன் தொண்டு அறக்கட்டளை சார்பில், அனைவருக்கும்  நீர் மோர் வழங்கப்பட்டது.

இன்றும் (13-ந்தேதி) சென்னை எம்.ஜி.ஆர்.நகர் சக்தி வினாயகர் கோவில் அருகில், கோடை வெயிலின் தாக்கத்தை போக்க நீர்மோர் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோடை காலம் முழுவதும் வழங்கப்படுகிறது. 

இது குறித்து வழக்கறிஞர் எம்.ஜி.ஆர். நகர் கே. புகழேந்தி கூறியதாவது:

வெயிலில் சோர்ந்து வரும் உழைக்கும் பாமர மக்கள் நீர் மோர் பருகி, அவர்கள் சொல்லும் 'நன்றி' என்ற வார்த்தை எங்களுக்கு மனநிறைவை தருகிறது.

வசதி படைத்தவர்கள் அனைவரும் ஏழை எளியோருக்கு உதவிட முன்வர வேண்டும்.

தர்ம சிந்தனை மேலோங்கி தேசமெல்லாம் மகிழ வேண்டும். இந்து மதத்தின் பெருமையை மக்களுக்கு புரிய வைத்த மஹான் ஜெகத் குரு ஆதிசங்கரர் நினைவு கூர்ந்து நேற்று நீர் மோர் வழங்கப்பட்டது' என வழக்கறிஞர் எம்.ஜி.நகர் கே.புகழேந்தி தெரிவித்தார்.

Share this story