புனித ரம்ஜான் மாத நோன்பு : சில தகவல்கள்..

By 
nabi3

சந்திரனை அதாவது நிலாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நாள்காட்டியை வைத்துதான் இஸ்லாமிய மக்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள். ஒவ்வொரு முறையும் இந்த தேதிகள் மாற்றமடையும். 

மெக்காவில் பிறை தெரியும் நாளை வைத்துதான் ரமலான் நோன்பு தொடங்கும். அதன் அடிப்படையில் இந்தாண்டு அதாவது 2023 ஆம் ஆண்டு மார்ச் 22 ல் தொடங்கி ஏப்ரல் 21 ல் முடிவடைகிறது. 

அடுத்த பிறை நிலவைக் காணும் வரை புனித மாதத்தின் முடிவைக் குறிக்கும் வரை 29 முதல் 30 நாட்கள் வரை நீடிக்கும்.

ரமலான் மாதத்தில் நோன்பு  ஒரு வழிபாடாகவே பார்க்கப்படுகிறது. ரமலான் மாதம் முழுவதும், ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயம் தொடங்கி, மாலை சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள். 

இதோடு இந்த நாள்களில் வசதி இல்லாதவர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது இஸ்லாமிய மக்களின் தலையாய கடமையாகும். இந்த உதவியைத் தான் 'சகத்' என்கின்றனர்.

இதோடு மட்டுமின்றி, இந்த நோன்பு காலக்கட்டத்தில் இஸ்லாமிய சகோதரர்கள், திருக்குரான் அனைத்தையும் வாசிக்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் பொறுமையையும் கடைபிடிக்க வேண்டும். இதோடு இந்த நாள்களில் கெட்ட பழக்கங்களையும் கைவிட வேண்டும். 

இவ்வாறு செய்வதன் மூலம் இறைவன் எப்போதும் அவர்களுக்கு அருகிலேயே பயணிப்பது போன்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும் என நம்பப்படுகிறது

Share this story