திருவாசகத்தின் சிறப்புகள்.!

By 
Features of the Church.!

திருவாசகம், சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.

பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம், 8 ஆம் திருமுறையாக உள்ளது. 

பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.

திருவெம்பாவை பாடல்கள் :

திருவாசகம் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. 

திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. 

திருப்பொற் சுண்ணம் முதல், திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. 

எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன. ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது இதன் சிறப்பை உரைக்கும் பழமொழி. 

சிறப்புகள் :

* நமசிவய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகம் தொடங்குகிறது.

* முதல் பதிகத்தில் 6 இடங்களில் ‘வாழ்க’ என முடியும். 2-வது பதிகத்தில் 5 இடங்களில் ‘வெல்க’ என முடியும்.

* 3-வது பதிகத்தில் 8 இடங்களில் ‘போற்றி’ என முடியும்.

* இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

* 32-வது வரியில் ‘மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்’ என பாடி இருப்பார். இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சுமமாக குறிக்கும்.

* திருவாசகத்தின் 18-வது வரியான ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

* ரமண மகரிஷி, திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில், அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

* இறந்த வீட்டில் கட்டாயம் திருவாசகம் படிக்க வேண்டும்.

* `புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய், பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்’ என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
*

Share this story