திருப்பதி ஏழுமலையானுக்கு, 9 டன் மலர்களால் இன்று புஷ்ப யாகம்

By 
 Flower offering today for Tirupati Ezhumalayan with 9 tons of flowers

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வரக்கூடிய கார்த்திகை மாதம் (ஸ்ரவண) திருவோண நட்சத்திரத்தன்று, புஷ்ப யாகம் நடத்தப்பட்டு வருகிறது.

திருமலை, திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான் ஸ்ரீவேதாந்த ஜெகநாத் ஸ்ரவண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான புஷ்ப யாகத்திற்காக, நேற்று அங்குரார்ப்பணம் ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் செய்தனர். 

ஏழுமலையான், கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு ஜீயர்கள் முன்னிலையில் பால், பன்னீர், இளநீர், சந்தனம் மூலம் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படும்.

இன்று (வியாழக்கிழமை) மதியம் 1 மணி முதல் 5 மணி வரை சாமந்தி, சம்பங்கி, ரோஜா, மல்லி, துளசி, மருதம் உள்ளிட்ட 18 ரகமான மலர்களால் புஷ்ப யாகம் நடத்தப்படும்.

வேதமந்திரங்கள் முழங்க 9 டன் மலர்களால் சாமிக்கு புஷ்ப யாகம் நடைபெறும். 

ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் சகஸ்கர தீப அலங்கார சேவைக்கு பிறகு, 4 மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

Share this story