புத்தாண்டு மகிழ்ச்சி : முதலாம் நாடு முதல், கடைசி நாடு வரை.!

Happy New Year First Country, Last Country!

பூமியின் ஒரு முனையில் பகலாக இருக்கும்போது, மறுமுனையில் இரவாக இருக்கும். 

அவ்வகையில், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் நாடாக உள்ளது. இதன் அடிப்படையில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பும் அமைகிறது. 

இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2022ஆம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், நியூசிலாந்தில் இந்திய நேரப்படி, நேற்று மாலையிலேயே புத்தாண்டு பிறந்துள்ளது. 

முதல் நாடு :

புத்தாண்டை முதலில் வரவேற்ற நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், உள்ளூர் நேரப்படி டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி ஆனதும் லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களைகட்டியது. நகரமே வண்ணமயமாக காட்சியளிக்கிறது. 

2022-ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். 

வலைத்தளங்கள் வாயிலாகவும், புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். 

கடைசி நாடு :

இந்திய நேரப்படி, இன்று காலை 5.30 மணிக்கு பிரிட்டனில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

இன்று, ஜனவரி 1-ம் தேதி காலை 9 மணி முதல், மதியம் 1 மணி வரை கனடா, அமெரிக்காவில் புத்தாண்டு பிறக்கிறது. 

மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடாக பேக்கர் தீவு மற்றும் ஹாவ்லாந்து தீவு இருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவெங்கும் நேற்று மாலை முதல் புத்தாண்டு மகிழ்ச்சியானது, ஒருவரையொருவர் தொற்றிக்கொண்டது.

பொதுவாக, ஒமைக்ரான் பரவல் இருப்பினும், மக்கள் அதனை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.

தமிழ் நாடு :

தமிழகத்தில்,  ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பின் காரணமாக, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், சாமான்யர் முதல், பிரபலங்கள் வரை புத்தாண்டு வாழ்த்துப் பரிமாற்றங்கள் வலைத்தளங்களில் விடிய விடிய வைரலாய் தெறித்தன.

மேலும், நள்ளிரவில் இறைவழிபாடுகளும் சிறப்புற நடைபெற்றன. வானமும் தமிழகத்தில் ஆங்காங்கே, வாழ்த்துத் தூறல்கள் பொழிந்த வண்ணம் இருந்தது.

ஆம், ஆங்கிலப் புத்தாண்டு அனைவருக்கும் நன்மைகள் நல்கும் என்றே, கடமையில் கண்ணும் கருத்துமாய் பயணிப்போம். 

என்றும், யாதும் ஊரென யாவரும் கேளிராய் மகிழ்வித்து மகிழ்வோம்.
*

Share this story