ஸ்ரீ ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் கேளாயோ.!

By 
Listen to the Motsa mantra taught by Sri Ramana!

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். 

ஆனால், வாயை மட்டும் மூடிக் கொண்டு, மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால், அது மௌனமாகாது. 

அதனால், எந்தப்' பயனும் இல்லை என்கிறார் ரமணர். மேலும், அவர் இம்மனித இனத்திற்கு சொன்னது என்ன? உணர்வோம். உணர்ந்து, வாழ்வியலில் வெல்வோம்!!

* கடவுளை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுள் அருளும், அவர்களை நிச்சயம் தேடும்.

* கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட  கருவிகளே. இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால், பணிவு வராமல் போகாது.

* தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.

* மனதை எண்ணங்களில் இருந்து விடுவிப்பதே சாதனையின் நோக்கமாகும்.

* குருவே ஈஸ்வரன். ஈஸ்வரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.

* தியானத்தில், ஆன்ம தியானம் எனப்படுவதே சிறந்தது. அது சித்தியானால், மற்ற தியானங்கள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. 

ஒவ்வொருவருடைய மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு, தியான முறைகளைக் 
கைகொள்ள வேண்டும்.

* உணர்வு ஒருமைப்பட்ட தியானத்தின்போது, சில வகை ஒலிகள் கேட்கும்; காட்சிகள் தெரியும். 

ஓர் ஒளி ஊடுருவது போல் தோன்றும். ஆனாலும், இவற்றில் மயங்கி தன்னிலை இழந்து விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.

* மந்திரங்களை இடைவிடாது சொல்வதால், மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்று ஆகும்.

* ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுவே மிகவும் முக்கியம்.

* இறைவன் எனும் ஞானத்தை ஒவ்வொருவரும், முயன்றுதான் அடைய வேண்டும்.

Share this story