மனமாகிய பீடத்தில் இறைவன் : ஆடி மாத சிறப்புகள்..
 

By 
Lord on the pedestal of the mind Specials of the month of Audi ..


ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன. ஆடிமாதத்தின் சிறப்புகளையும், அம்மனை வழிபடவேண்டிய முறைகளையும் காணலாம்.

'ஆடி அழைக்கும். உகாதி ஓட்டும்' என ஒரு சொலவடை உண்டு. 
அதாவது, தமிழ் வருடத்தில் ஆடி மாதத்திலிருந்துதான் அனைத்து பண்டிகைகள் திருவிழாக்கள் தொடங்குகின்றன. யுகாதியோடு பண்டிகைகள் முடிந்துவிடும். 

அதன்பிறகு, சித்திரை வருடப் பிறப்பைத் தவிர வேறு பண்டிகைகள் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதைச் சிறப்பிக்கும் விதமாக, ஆடி முதல் நாளில் ஆடிப்பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது. வாசலில் கோலம் செம்மண்(காவி) என, களை கட்டத்தொடங்கிவிடும். 

ஆடிப்பட்டம் தேடி விதை :

ஆடி மாதப் பிறப்பில், ஆடிப்பால் தயாரிப்பார்கள். புதிதாகத் திருமணம் ஆன மணமகனை அழைத்து, ஆடியில் ஆடிப்பால் கொடுப்பது வழக்கம்.

'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பது பழமொழி. சித்திரை முதல் ஆனி வரை வெயிலின் ஆர்ப்பாட்டம். 

ஆடியில் காற்றுடன் மழையும் பெய்யும். அதனால் ஆடியில் நெல் விதைத்தால், தை மாதத்தில் நல்ல மகசூல். இதனால், வந்தது இந்த பழமொழி.

எனவே, விவசாய நாடான நமது நாட்டில் பொன்னேரு பூட்டும் வழக்கம் மரபில் இருந்தது.
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவிலில் திருவிழாக்கள் தொடங்கும். அனைவரும் தற்போது வீட்டில் இருந்தபடியே அம்மனை வணங்கி ஆசி பெறுவோமாக.

தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான், பூமாதேவி அவதரித்ததாகச் சொல்கின்றன புராணங்கள். 

இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய்ந்தன என்று ஜோதிட சாஸ்திர நூல்கள் பலவும் சிறப்பிக்கின்றன. ஆடிப்பிறப்பு,  புதுமணத் தம்பதிக்கு ஆடிப்பால் அளித்தல் என அறிந்துகொள்ள வேண்டிய ஆடி மாத விசேஷ வைபவங்கள் பல உண்டு.

வழிபாட்டு முறைகள் :
 
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன. ஆடிமாதத்தின் சிறப்புகளையும், அம்மனை வழிபடவேண்டிய முறைகளையும் காணலாம்.

* ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

* ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

* ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து, அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

* ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

* அம்மனை வழிபடும் போது, மறக்காமல் ‘லலிதாசகஸ்ர நாமம்’ சொல்ல வேண்டும்.

* ஆடி மாதத்தை 'பீடை மாதம்' என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், 'பீட மாதம்' என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

* ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால், வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.

* ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகளையும் பெறலாம் என்பது ஐதீகம்.

* ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயசம் படைத்து வழிபட்டால், எப்பேர்பட்ட பகையும் விலகும்.

* பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால், ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

* ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர், விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப் பரப்பி, அதன்மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

* பெரியபாளையம் கோவிலில், எந்த அம்மன் தலத்திலும் இல்லாத வகையில், 2 மாதங்கள் ஆடி திருவிழா நடைபெறும்.

* ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும்போது, சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

Share this story