சபரிமலை கோவிலில் மாசி மாத பூஜை.. நாளை நடை திறப்பு..

By 
ayyappan7

சபரிமலை: மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்குப் பிறகு அடைக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில் நடை  நாளை 13ஆம் தேதி கும்பம் மாத பூஜைக்காக திறக்கப்பட உள்ளது. 

14 ஆம் தேதி காலை முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை 12 ஆம் தேதி மாலையில் திறக்கப்படுகிறது. தொடர்ந்து மறுநாள் முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். 

எனவே அதற்கு முன்னதாகவே காணிக்கை நாணயங்களை எண்ணி முடிப்பதற்கு திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர். 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக சபரிமலை சீசனான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருவது வழக்கம். 

அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்கிய மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பிறகு 2 நாள் இடைவெளிக்கு பிறகு மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. கடந்த மாதம் 20 ஆம் தேதியுடன் மகர விளக்கு பூஜை, மகர ஜோதி தரிசனத்துடன் நிறைவடைந்தது. 

இதையடுத்து நடை சாத்தப்பட்டது. கடந்த சபரிமலை சீசனின் போது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.  இந்த முறை 50 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
 

Share this story