மேலிருந்து பார்க்கும் நவக்கிரகங்கள்.!
 

By 
Navagrahas seen from above.!

சிவன் கோவில்களில், வழக்கமாக நவக்கிரகங்களின் சிலைகள் இருக்கும். அதனை பக்தர்கள் சுற்றி வந்து வழிபடுவார்கள். 

ஆனால், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத்தில், மேல் தளத்தில் நவக்கிரக சிலைகள் உள்ளன. ஒரே கல்லில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. 

இதுதவிர, அந்த கல்லில் 12 ராசிகளும் இடம் பிடித்துள்ளன.

புதிதாக செல்பவர்கள் நவக்கிரக மண்டபத்துக்கு சென்றால், அங்கு வெறும் மேடை மட்டுமே தென்படும். தலையை உயர்த்தி மேலே பார்த்தால்தான் நவக்கிரகங்களையும், ராசிகளையும் காண முடியும். 

யாகம் :

சிவனும், பார்வதி தேவியும் இக்கோவிலில் அமர்ந்து யாகம் செய்தபோது, நவக்கிரகங்கள் மேலிருந்து கீழ் நோக்கி வழிபட்டதால், எல்லா நவக்கிரகங்களும் கீழ் நோக்கி பார்ப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல், வழிபடும் பக்தர்களை மேலிருந்து நவக்கிரங்கள் பார்க்கின்றன. 

பூஜை :

பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் தொடங்கி, சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் வரை சிவன், பார்வதி, குமரி தேவி விக்ரகங்கள் இந்த மண்டபத்தில் பூஜையில் இருப்பார்கள். இது அக்னி நட்சத்திர காலமாகும், தெய்வங்களை குளிர்விக்க நடத்தப்படும் பூஜை. 

இதற்காக, பூஜை நடைபெறும் வசந்தமண்டபத்தில் உள்ள குழியை சுற்றி தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இந்த பூஜை முடிந்த மறுநாள் சித்திரை தெப்பத்திருவிழா கொடியேற்றம் தொடங்குவது வழக்கமாக உள்ளது.

தற்போது, மார்கழி மாத பூஜைகள் நடைபெற்று வருகிறது.
*

Share this story