மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், இன்று ஒடுக்கு பூஜை..

bhagavathi3

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

விழாவில் நேற்று (திங்கட்கிழமை) இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய சக்கர தீவட்டி வீதி உலாவும் நடந்தது.

விழாவின் 10-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், 4.30 மணிக்கு அடி யந்திர பூஜை, காலை 6 மணிக்கு குத்தியோட்டம், 

மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா வருதல், 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் கோவிலுக்கு கொண்டு வருதல், 12 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் ஒடுக்கு பூஜை போன்றவை நடக்கிறது.


 

Share this story