ஆலுவா கோவில் ஆற்றுப்பாலத்தில், காதல் பூட்டு போடும் காதலர்கள்; வினோத கலாச்சாரம்..

By 
lock

கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் பிரசித்தி பெற்ற மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள ஆற்றில் பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

மகாசிவாரத்திரி தினத்தையொட்டி இக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆற்று பாலத்தில் நடந்து சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பாலத்தின் கைப்பிடி கம்பிகளில் ஏராளமான பூட்டுக்கள் தொங்கி கொண்டிருந்தன. கைப்பிடி கம்பிகளை இணைத்து இந்த காதல் பூட்டுக்கள் போடப்பட்டு இருந்தன.

இதுபற்றி பக்தர்கள் கூறும்போது, 'கோவிலில் விழா நடைபெறாத நாட்களில் இங்கு ஏராளமான காதல் ஜோடிகள் வருகிறார்கள். அவர்கள் தங்கள் காதல் கைகூடவும், பிரியாமல் இருக்கவும் வேண்டி ஆற்று பாலத்தில் காதல் பூட்டு போடும் பழக்கத்ைத தொடங்கி உள்ளனர். இது மேற்கத்திய கலாச்சாரமாகும்.

அங்குதான் இதுபோன்று காதல் ஜோடிகள் ஆற்று பாலங்களில் காதல் பூட்டுக்களை தொங்கவிட்டு அதன் சாவியை ஆற்றுக்குள் எறிந்து விடுவார்கள். இப்போது ஆலுவாவிலும் இதுபோன்ற கலாச்சாரம் பரவியுள்ளது. இங்கும் பூட்டு போட்டுவிட்டு சாவியை ஆற்றுக்குள் எறிந்து விடுகிறார்கள். இதனால் பூட்டை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கம்பிகளில் வரிசையாக பூட்டுக்கள் தொங்குவது பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. இதனை அவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும். இந்த பூட்டுக்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தெரிவித்துள்ளனர். 

Share this story