திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவை : ஆன்லைனில் இன்று டிக்கெட் வெளியீடு..

By 
dr4

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதனை தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படும். இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பணத்தை செலுத்தி உறுதி செய்ய வேண்டும். 

அதேபோல், ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் இன்று காலை 11.30 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஜூலை மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளும் இன்று  மாலை 3 மணிக்கு தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

ஜூலை மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய்வாய்ப்பட்டவர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக மே மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்களின் ஒதுக்கீடு நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் தேவஸ்தானம் வெளியிடுகிறது.

இதன் தொடர்ச்சியாக, மெய்நிகர் சேவைகளுக்கான மே மாத ஒதுக்கீடு, 24-ந்தேதி காலை 10 மணிக்கும், ஜூன் மாத ஒதுக்கீடு 24-ந் தேதி மாலை 3 மணிக்கும் வெளியிடப்படுகின்றன. மே மற்றும் ஜூன் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வருகிற 25-ந் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது. 

திருமலையில் உள்ள தேவஸ்தான அறைகளுக்கான மே மாத ஒதுக்கீடு வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கும், திருப்பதியில் உள்ள தேவஸ்தான அறைகளுக்கான மே மாத ஒதுக்கீடு 27-ந் தேதி காலை 10 மணிக்கும் இணையத்தில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
 

Share this story