பழனி மாரியம்மன் கோவில் : 17-ந்தேதி மாசித்திருவிழா தொடக்கம்..

mari6

பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவில் கிழக்கு ரதவீதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அம்மன் லிங்க வடிவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

இங்கு ஆண்டுதோறும் மாசித்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா வருகிற 17-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 

இதைத்தொடர்ந்து 21-ந்தேதி திருக்கம்பம் அலங்கரித்தல், கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 28-ந்தேதி கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும், மார்ச் 7-ந்தேதி திருக்கல்யாணமும் நடக்கிறது. அன்று இரவு அம்மன் தங்க குதிரை வாகனத்தில் உலா வருகிறார். 

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 8-ந்தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த நாள் கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவில் மாரியம்மன் தங்கமயில், புதுச்சேரி சப்பரம், வெள்ளியானை, தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.
 

Share this story