பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை : ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
 

By 
Puri Jegannath Chariot Pilgrimage Congratulations to the President and the Prime Minister

ஒடிசாவின் பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை உலக புகழ் பெற்றதாகும். கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலை காரணமாக, இந்த ரத யாத்திரை பக்தர்கள் இன்றி நடந்தது.

வாழ்த்துகள் :

இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை (12-ந்தேதி) தொடங்கியது. ரத யாத்திரையை முன்னிட்டு, 'இன்றும் (13-ந்தேதி) ஊரடங்கு அமலில் இருக்கும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பக்தர்களின்றி, ஒடிசா அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, ரத யாத்திரை நடைபெறும்.

பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையின்போது, கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும். போலீசார் மட்டுமின்றி, சுமார் 1000-க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள், தேரோட்டத்தில் பங்கேற்பார்கள்.

ரத யாத்திரைக்கு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

500 ஊழியர்கள் :

இது குறித்து சிறப்பு நிவாரண கமிஷனர் ஜெனா கூறுகையில், ‘ஜெகநாதர் ரத யாத்திரையில் இந்த ஆண்டும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 

இதைப் போல மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

ரத யாத்திரையின்போது, பூரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும். 

மேலும், கடந்த ஆண்டைப் போலவே தொலைக்காட்சியில் மக்கள் நேரலையாக பார்த்து மகிழலாம்.

2 டோஸ் தடுப்பூசி போட்ட மற்றும் கொரோனா இல்லாத 500 ஊழியர்கள் மட்டுமே, ரதத்தை இழுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்' என்றார்.

Share this story