புரட்டாசி மாத விரதங்கள்.!
 

By 
 Revolutionary fasts.!

புரட்டாசி மாதத்தில், சனிக்கிழமை மட்டும்தான் உகந்தநாள் என்று இல்லை.

புரட்டாசி மாதம் முழுவதுமே விரத நாட்கள்தான். இவை குறித்துக் காண்போம்.

* புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில், சித்தி விநாயகர் விரதம் கடைப்பிடிக்கலாம். 

* புரட்டாசி வளர்பிறை சஷ்டியில், சஷ்டி-லலிதா விரதம் இருக்கலாம்.

* புரட்டாசி வளர்பிறை சதுர்த்தியில், அனந்த விரதம் இருக்கலாம். 

* புரட்டாசி வளர்பிறை சப்தமியில், அமுக்த பரண விரதம் இருக்கலாம். அதுபோல, வளர்பிறை அஷ்டமியில் ஜேஷ்டா விரதமும், மகாலட்சுமி விரதமும் இருக்கலாம். 

* புரட்டாசி தேய்பிறை சஷ்டியில், கபிலா சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

* இவை அனைத்துக்கும் மேலாக, மகாளயபட்ச பித்ரு வழிபாடு நாட்களும் புரட்டாசியில்தான் வருகிறது. பித்ருக்களின் ஆசியை அன்றைய தினங்களில் பெறலாம்.

* எனவே, புரட்டாசி மாதம் 31 நாட்களும் வழிபாடுக்கு உகந்த நாட்களாகும். இதனால், அபரிமிதமான பலன்களை பெறலாம்.
*

Share this story