தென்காசி விசுவநாத சுவாமி கோவில் : திருக்கல்யாண திருவிழா இன்று தொடக்கம்

Tenkasi Viswanatha Swamy Temple Tirukkalyana festival starts today

பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று, தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில்.

இக்கோவிலில், இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

ஐப்பசி திருக்கல்யாணம் :

பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். 

இந்த ஆண்டுக்கான விழா, இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அதிகாலை 5-30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.

உற்சவர் வீதி உலா :

திருவிழா வருகிற 1-ந் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. 

உற்சவர் வீதி உலா மற்றும் சப்பர வீதி உலா அனைத்தும் கோவில் பிரகாரங்களிலேயே நடக்கிறது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக, தேரோட்டம் மற்றும் சப்பர வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது.

Share this story