வில்வத்தின் மகிமை..

vilvam

வில்வ இலை ரொம்பவே உயர்வானது. வில்வத்தோட பெருமைகளைப் பற்றி சிவபுராணம் விரிவாக சொல்லி உள்ளது. வில்வமரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். 

ஒரு வில்வ மலரானது ஒரு லட்சம் தங்க புஷ்பங்களுக்கு இணையானது என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி என்றால் அதோட சிறப்பு உங்களுக்குப் புரியுமே. அதைத் தவிர ஒரு வில்வ மரத்தை வீட்டுல வளர்த்தால் அஸ்வமேத யாகம் செஞ்ச பலனும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும், கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் உலகில் உள்ள அத்தனை சிவாலயங்களைத் தரிசித்த பலனும் கிடைக்கும். 

அதைத் தவிர வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு அதற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதைப் பறித்து எத்தனை நாள்கள் ஆனாலும் உலர்ந்து போனாலும் கூட பூஜைக்குப் பயன்படுத்தலாம். 

மற்ற மலர்களையோ இலைகளையோ அந்த மாதிரிப் பயன்படுத்தக் கூடாது. இது வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு.

Share this story