பிரம்மாண்டத்தின் உச்சம்.. வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி ராமர் கோயிலின் மெய் சிலிர்க்க வைக்கும் கட்சிகள் இதோ..

By 
mandir1

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், பிரம்மாண்ட விழாவுக்கான விரிவான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இந்த விழாவில் நாட்டின் முக்கிய விஐபிக்கள் பங்கேற்க உள்ளனர்.

கோயில் கும்பாபிஷேகத்திற்கான 7 நாள் சடங்குகள் கடந்த 16-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனிடையே ராமர் சிலை பிரதிஷ்டை விழாவுக்காக பிரதமர் மோடி 11 நாள் கடும் விரதத்தை மேற்கொண்டு வருகிறார். தரையில் தூங்கியும், இளநீர் மட்டுமே குடித்தும் அவர் விரதத்தை அனுசரித்து வருகிறார்.

இந்த நிலையில் ராமர் கோயிலின் பிரத்யேக வீடியோவை டிடி நியூஸ் வெளியிட்டுள்ளது. பிரம்மாண்டமான பளிங்கு கட்டிடம் மின் விளக்குகளால் ஒளிர்வதையும், கோயிலின் தூண்கள் மலார்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. மேலும் கோயிலின் உள்ளே பணியாளர்கள் ஏணி மீது ஏறி மற்ற இடங்களை மலர்களால் அலங்கரிப்பதையும் பார்க்க முடிகிறது.

மேலும் அந்த வீடியோவின் தலைப்பில் “ அற்புதமான, சிறப்புமிக்க ராமர் கோயிலுக்குள் பிரத்தியேகமான ஸ்னீக் பீக் காட்சிகள்! கோயிலின் கலைத்திறன் பிரமிக்க வைக்கிறது, இந்தியாவின் வளமையான கலாச்சார பாரம்பரியத்திற்கு இது மிகச்சிறந்த சான்று” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி 22 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு கும்பாபிஷேகம் தொடங்க உள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டைக்காக தற்போது கோயில் 7 நாள் சடங்குகள் நடைபெற்று வரும் நிலையில், இறுதி நிகழ்வாக சிலை பிரதிஷ்டை நிகழ்வு நடைபெறும். இந்த பிரம்மாண்ட விழாவின் முக்கிய சடங்குகளை லட்சுமிகாந்த் தீட்சித் தலைமையிலான அர்ச்சகர்கள் குழுவினர் செய்ய உள்ளனர்.

சடங்குகளின் ஒருபகுதியாக கோயில் கருவறைக்குள் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது., 51 அங்குலம் கொண்ட இந்த சிலை, 5 வயதில் ராமரை சித்தரிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் என்பவர் கருங்கல்லில் இந்த சிலையை செதுக்க் உள்ளார். இந்த சிலையின் முழுமையான தோற்றம் முதன்முறையாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது,  பகவான் ராமரின் புன்னகை ததும்பும் முகம், தங்க வில் மற்றும் அம்பு ஆகியவற்றை பார்த்து பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story