திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் : மார்கழி மாத பூஜை நேரங்கள்

By 
 Thiruchendur Subramania Swamy Temple Puja times in the month of March

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழ் மாதம் மார்கழியை முன்னிட்டு பூஜை காலங்கள் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்து கொள்ளலாம்.

தமிழ் மாதமான மார்கழி நாளை (வியாழக்கிழமை) தொடங்கி, அடுத்த மாதம் ஜனவரி 13-ந் தேதி நிறைவு பெறுகிறது. 

இந்த நாட்களில், அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

தீபாராதனை :

அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. 

அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், காலை 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், காலை 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது. 

பின்னர், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. 

இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும், இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடக்கிறது. பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

20-ந்தேதி :

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, வருகிற டிசம்பர் 20-ந் தேதி (திங்கள்கிழமை) அன்று மட்டும் கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படுகிறது. 

தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்' என வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story