இது, மனித தர்மத்தில் ஒரு தனிப் பெருங்கருணை..!

By 
kkp1

சென்னை, எம்.ஜி.ஆர். நகர் சக்தி வினாயகர் கோவில் அருகில், கோடை வெயிலின் தாக்கத்தை போக்க இன்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.  சாந்தா கிருஷ்ணன் தொண்டு அறக்கட்டளை சார்பில் கோடை காலம் முழுவதும் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

இது குறித்து, வழக்கறிஞர் எம்.ஜி.ஆர்.நகர் கே.புகழேந்தி தெரிவித்ததாவது;

'கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கும் உழைப்பாளிகள் மற்றும் பாமர கூலி தொழிலாளிகளுக்கு மோர் வழங்குவது என்பது, மனித தர்மத்தில் ஒரு பெரிய காரியமாகும். தனிப் பெருங்கருணை எனவும் குறிப்பிடலாம். அதனால்தான் 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றார் வள்ளலார். 

நாங்கள் மோர் கொடுக்கும்போது, அதை கோடைவெயிலில் பருகும் மக்கள்.. 'நன்றி' என்பது எங்களுக்கு இன்னமும் ஒரு ஊக்கத்தை தருகிறது. 

எங்கள் சாந்தா கிருஷ்ணன் தொண்டு அறக்கட்டளை செய்யும் இந்த பணியை, மக்கள் நடமாடும் எல்லா பகுதிகளிலும் இளைஞர்கள் சேர்ந்து செய்தால், அது மக்களின் ஒற்றுமையையும் பரோபகாரத்தில் சமுதாயத்திற்கு தெரிவிக்குமாறு விளங்கும். 

நாம் இந்தியனாக ஒற்றுமையுடன் வாழ்ந்தால், நம் நாடு விரைவில் வல்லரசாக மாறும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. ஜெய் ஹிந்த்' என வழக்கறிஞர் எம்.ஜி.ஆர்.நகர் கே.புகழேந்தி கூறினார்.
 

Share this story