திருமலை அருகே, ஏப்ரல் 6-ந்தேதி தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம்..

tirupati44

* திருமலையில் உள்ள புண்ணியத் தீர்த்தங்களில் ஒன்று, தும்புரு தீர்த்தம். இந்தத் தீர்த்தம் ஏழுமலையான் கோவிலில் இருந்து 7½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. 

இந்தத் தீர்த்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு பால்குன மாதம் பவுர்ணமி நாளில் உத்தர பால்குனி நட்சத்திரத்தன்று, தும்புரு தீர்த்த முக்கொடி உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி திருமலை அருகே தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடக்கிறது. அன்று, இந்தத் தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடினால் சகல பாவங்களும் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சில சிவாலயங்களில் பெருமாளுக்கு தனி சன்னதிகள் உள்ளன. சிறப்பு பெற்ற அந்த சிவாலயங்களை பற்றி பார்க்கலாம். 

* திருவோத்தூர் - ஆதிகேசவப் பெருமாள
* திருவோத்தூர் - ஆதிகேசவப் பெருமாள்
* கச்சி ஏகம்பம் - நிலாத்துண்டப் பெருமாள் 
* கொடிமாடச் செங்குன்றூர் - ஆதிகேசவப் பெருமாள் 

* சிதம்பரம் - கோவிந்தராஜப் பெருமாள்
* திருநணா - ஆதிகேசவப் பெருமாள் 
* சிக்கல் - கோலவாமனப் பெருமாள் 
* திருநாவலூர் - வரதராஜப் பெருமாள் 

* திருநெல்வேலி - நெல்லை கோவிந்தர் 
* திருப்பழனம் - கோவிந்தர் 
* பாண்டிக் கொடுமுடி - அரங்கநாதர் 
* திருப்பத்தூர் - அரங்கநாதர் 
* திருவக்கரை - அரங்கநாதர்
*

Share this story