திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் : வைகாசி வசந்த திருவிழா தொடங்கியது..

By 
vaikasi1

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி வசந்த திருவிழா தொடங்கியது. இத்திருவிழா வருகிற 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 

விழாவை முன்னிட்டு  அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. 

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் வசந்த மண்டத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகியது. 

சுவாமி வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் 11 முறை சுற்றி வலம் வந்தார் வந்தார். பின்னர் சுவாமிக்கு அம்பாள்களுக்கும் மகா தீபாராதனை நடந்தது. 

இரவு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். வசந்த திருவிழா நிறைவு நாளான 10-ம் நாள் ஜூன் 2-ந் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.

 

Share this story