திருப்பதி ஏழுமலையானை கூட்ட நெரிசலில் சிக்காமல், கூலாக தரிசிக்கலாம்; இந்த மாதங்களில் கிளம்புங்கள்..

By 
tirupati10

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய திட்டமிட்டிருக்கிறீர்களா?  கூட்டம் இல்லாத மாதங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

திருப்பதிக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். அதுபோல் பண்டிகை நாட்கள், வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். 

திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்றால் பல மாதங்களுக்கு முன்பே காத்திருந்து ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு சென்றாலும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. 

திருப்பதியில், சுவாமி தரிசனம் செய்ய சிறந்த மாதம் என்றால் பிப்ரவரியும், நவம்பரும்தான். இந்த மாதங்களில் மிதமான தட்ப வெப்பநிலை நிலவும் என்பதால், இது பக்தர்களுக்கு நல்லதொரு உணர்வை ஏற்படுத்தும். 

கோடை விடுமுறையில் கூட்டம் அலைமோதும் சுவாமி தரிசனம் செய்யவே ஒன்றரை நாட்கள் ஆகும். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை (புரட்டாசி தொடங்காத வரை) பள்ளி, கல்லூரிகள் திறந்துவிடும். இதனால், அந்த மாதங்களில் திருப்பதி சென்றால் விரைவாகவும் நிம்மதியாகவும் சுவாமி தரிசனம் செய்யலாம். 

அதுபோல், ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படும். எனவே, திருப்பதிக்கு அந்த பண்டிகையின்போது ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தவர்கள் வரமாட்டார்கள். எனவே, விநாயகர் சதுர்த்தியின் போதும் கூட்டம் குறைவாக இருக்கும். அதுபோல் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது திருப்பதியில் கூட்டம் குறைவாக இருக்கும்.

Share this story