திருப்பதி கோவில் : ஜூலை மாத திருவிழாக்கள்
 

By 
Tirupati Temple Festivals in July

தற்போது கொரோனா பரவல் காரணமாக, திருப்பதியில் மிகக்குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முன்பதிவு மூலம் டிக்கெட் வாங்கி உள்ளவர்கள் மட்டுமே, திருமலைக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் நடக்கும் திருவிழாக்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து வருகிறது. 

அதன்படி, ஜூலை மாதம் ஏழுமலையான் கோவிலில் நடக்கும் திருவிழாக்கள் விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு :

5-ந் தேதி திங்கட்கிழமை சர்வ ஏகாதசியும், 6-ந் தேதி வசந்த மண்டபத்தில் ராவண வதம் பாராயணமும் நடக்கிறது. 

14-ந்தேதி மகரிஷி திருநட்சத்திர பூஜையும், 16-ந் தேதி ஸ்ரீவாரி ஆடிமாத முதல் தேதி விசேஷ பூஜை உற்சவமும் நடைபெறும். 

20-ந் தேதி சயன ஏகாதசி பூஜை மற்றும் சாத்தூர் மாத விரத பூஜை நடக்கிறது.

21-ந் தேதி நாராயண கிரியில் சத்திர ஸ்தாபிதம் மற்றும் 24-ந் தேதி வியாச ஜெயந்தி குரு பவுர்ணமியை முன்னிட்டு, கருட வாகன உற்சவம் நடைபெறுகிறது.

தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், மிகக்குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முன்பதிவு மூலம் டிக்கெட் வாங்கி உள்ளவர்கள் மட்டுமே திருமலைக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் மலையடிவாரத்தில் தீவிர பரிசோதனை செய்த பின்னரே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்கள்.

Share this story