திருவண்ணாமலை, கோவிலில் பூ போடும் வைபவம்; 4-ந்தேதிவரை உற்சவம்..


 

By 
aru78

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவம் நடந்து வருகிறது. முதல் நாளில்   அண்ணாமலையார் உண்ணாமுலைஅம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 

கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள பன்னீர் மண்டபத்தில் சுவாமி அம்பாளுடன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து அண்ணாமலையார் மகிழ மரத்தை 10 முறை தொடர்ந்து வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

அப்போது, பாவை பொம்மை பூ போடும் வைபவம் நடந்தது. அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் சந்தோசப்படுத்தும் விதத்தில் பாவை வடிவிலான பொம்மை ஒவ்வொரு சுற்று முடிவிலும் பூ கொட்டியது. 

இந்த நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். வருகின்ற 4-ந் தேதி வரை அண்ணாமலையார் உண்ணாமுலைஅம்மன் இரவு நேரங்களில் மூன்றாம் பிரகாரத்தில் 10 முறை வலம் வரும் உற்சவம் நடக்கிறது.


 

Share this story