இன்று, வராக ஜெயந்தி : அறிய வேண்டிய அரிய தகவல்கள்..

varaha3

காக்கும் கடவுளான மகாவிஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மூன்றாவதாக எடுத்த அவதாரமாக  வராக அவதாரம். வராகம் என்றால் பன்றி பூமியை கைப்பற்றிய இரணியன் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரன் அதை கடலுக்குள் கொண்டு சென்றாள். 

பூமியை காக்க கடலில் இருந்து பூமியை மீட்க மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தார். பூமியை காப்பதை தடுக்க வந்த அசுரன் இரணியாட்ரனுடன் ஆயிரம் ஆண்டுகள் போர் செய்து வராகமூர்த்தி வென்றார்.

வராக ஜெயந்தி :

இந்த வராக ஜெயந்தியன்று பூமி சம்பந்தமாக தொழில் செய்பவர்கள் வராஹ மூர்த்தியை வணங்கி அருள் பெறலாம். புதிதாக நிலம் வீடு வாங்க திட்டமிட்டு உள்ளவர்கள் முதலீடு செய்ய முயற்சி செய்பவர்கள், இந்த நாள் அன்று இறைவனை வணங்கி தங்கள் காரியத்தை செய்தால் நிச்சயம் தடங்கல் இல்லாமல் வெற்றி பெறலாம். 

வீடு, நிலம் என சொந்தமாக வாங்கிய இடத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் இந்த நாளன்று இறைவனை வழிபட்டு நிவர்த்தி பெறலாம். பூர்வீக சொத்து கிடைக்காமல் பிரச்சினைகள் உள்ளவர்கள் வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் தடைபட்டு தவிப்பவர்கள் இந்த நாளன்று வராக மூர்த்தியை வழிபடலாம்.

மோட்சம் தரும் வராக மூர்த்தி:

வராகமூர்த்திக்கு ஞான பிரான் என்ற பெயரும் உண்டு . நாம் மோட்சம் அடைய ஞான பிரானின் வழிபாடு சிறந்தது. 

ஸ்ரீ வராக புராணத்தில் வராகர் கூறியது என்னவென்றால், எவர் ஒருவர் தனது உடல்நிலை நல்ல நிலையில் இருக்கும்போது என்னையே நினைத்து பிரார்த்திக்கின்றாறோ, அவர் கடைசி காலத்தில் மூச்சு பேச்சின்றி நாக்கு தடுமாறும் அந்திம காலத்தில் நானே அவரை என்னுடன் அழைத்துக் கொண்டு நற்கதியை கொடுப்பேன்.

வராக மூர்த்தி ஆலயங்கள் :

சென்னை மகாபலிபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் மகாலட்சுமியை இடது மடியில் அமர்த்திய நிலையில் வராகமூர்த்தி கோயில் உள்ளது. 

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள கள்வர் பெருமாள் ஆதி வராகர் என்று வணங்கப்படுகிறார் சிறப்புமிக்க இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சென்னை அடுத்த செங்கல்பட்டு அருகே திருமலை வையாபூர் எங்களது தளத்தில் லட்சுமி வராகமூர்த்தி கோவில் உள்ளது. 

கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டத்தில் உள்ள பன்னியூர் என்ற ஊரில் 4000 வருடங்களுக்கு பழமையான வராகமூர்த்தி கோவில் உள்ளது இந்தியாவிலேயே மிகவும் சிறப்பான வராகமூர்த்தி கோவில் இதுவென கருதப்படுகிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்று வராக மூர்த்தியை வணங்கி அருள் பெறலாம்.
 

Share this story