வைகுண்ட ஏகாதசி : இன்று சொர்க்கவாசல் திறப்பு

By 
Vaikunda Ekadasi: The gates of heaven open today *

பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில், வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. 

வைகுண்ட ஏகாதசி விழா, ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம். 

ஆனால், இந்த ஆண்டு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் கார்த்திகை மாத இறுதியில், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

சிறப்பு வழிபாடுகள் :

தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு இன்று வியாழக்கிழமை நடக்கிறது.
இதையொட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. 

மோட்சம் :

அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, அதிகாலையில் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து, சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதனால், திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

வழிகாட்டு நெறிமுறைகள் :

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை பக்தர்கள் திருக்கோயிலின் உள்ளே செல்ல அனுமதியில்லை. 

இன்று காலை 6.15 மணிக்கு மேல் இரவு 8.00 மணி வரை அரசால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா தொற்று தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல், மற்ற கோவில்களில் கொரோனா தொற்று தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

Share this story